இந்தியா

திரிபுரா முதலமைச்சருக்கு கொரோனா தொற்று: தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்!

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் அப்பாவி பொது மக்கள் மட்டுமின்றி மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் எம்எல்ஏக்கள் பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது மாநில முதலமைச்சர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்தான் திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லாப் குமார் தெப்பு அவர்கள். திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லாப் குமார் தெப்பு அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்ததை அடுத்து அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அவர் வீட்டிலேயே தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டு அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளும்படி வலியுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரிபுரா மாநில முதலமைச்சருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version