தமிழ்நாடு

ஓபிஎஸ் மகனால் வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக திணறல்: விஸ்வரூபம் எடுக்கும் முத்தலாக் விவகாரம்!

Published

on

வேலூர் மக்களவை தேர்தலில் ஏ.சி.சண்முகம் அதிமுக சார்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றார். இந்த தொகுதியில் இஸ்லாமியர் வாக்குகள் கணிசமாக உள்ளது. ஆனால் சமீபத்தில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் முத்தலாக் சட்டத்தில் ஆதரவு தெரிவித்து வாக்களித்தது வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் எதிரொலித்து வருகிறது.

முன்னதாக அதிமுக, பாஜக உடன் கூட்டணி வைத்தது இஸ்லாமியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இதனை சமாளிக்க எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் சிறுபான்மையின பிரிவின் மாநிலதுணை செயலாளரான முன்னாள் அமைச்சரும், வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை சேர்ந்த தொழிலதிபருமான முகமது ஜான்னை மாநிலங்களவை எம்.பியாக்கினார்.

ஆனால் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வியூகத்தை உடைக்கும் விதமாக செயல்பட்டுள்ளார் அதிமுக சார்பாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார். இவர் மக்களவையில் முத்தலாக் சட்டத்துக்கு ஆதரவாக பேசி, ஆதரவாக வாக்களித்துள்ளார். ஆனால் இந்த சட்டம் இஸ்லாத்தின் ஷரியத் விவகாரத்தில் தலையிடுகிறது என கடுமையாக இஸ்லாமிய அமைப்புகள், கட்சிகள் எதிர்த்து வருகின்றன.

ஆனால் அதிமுக எம்பி ரவீந்துரநாத் குமார் ஆதரவாக வாக்களித்தது இஸ்லாமியர்கள் மத்தியில் அதிமுகவுக்கு கெட்டப்பெயரை உருவாக்கியுள்ளது. இது தற்போது வேலூர் தேர்தலில் எதிரொலித்துள்ளது. திமுகவினர் இந்த விவகாரத்தை கையிலெடுத்து தீவிரமாக அதிமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதிமுகவை இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சியாக பிரச்சாரம் செய்து வருகிறது திமுக. திமுகவின் இந்த பிரச்சாரத்தை அதிமுகவால் சமாளிக்க முடியாமல் திணறுகிறது.

seithichurul

Trending

Exit mobile version