இந்தியா

மீண்டும் வாக்கு எண்ணிக்கை இல்லை: மம்தா கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் ஆணையம்!

Published

on

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று காலை முதல் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தமிழகத்தில் திமுகவும், புதுவையில் என்ஆர் காங்கிரஸ் கட்சியும், கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியும், அசாமில் பாஜகவும் வெற்றி பெற்றது

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை மிக அபாரமாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநிலத்தில் பாஜகவும் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருந்தாலும் மம்தா பானர்ஜி கட்சியை வீழ்த்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து இருந்தாலும் மம்தா தனது சொந்த தொகுதியான நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். அவர் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அந்த தொகுதியில் அவர் பெற்ற வாக்கு ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 808 என்பது ஆகும். ஆனால் அவரைவிட பாஜகவின் சுவேந்து அதிகாரி ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 764 வாக்குகள் பெற்றதால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் தனது தொகுதியில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் செய்தார். ஆனால் அவரது கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. மீண்டும் வாக்கு எண்ணிக்கை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து மம்தா பானர்ஜி ஏதாவது ஒரு தொகுதியில் இடைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version