தமிழ்நாடு

திருச்சி இரண்டாவது தலைநகராகும்: பிரச்சாரத்தில் அடித்துவிடும் பிரேமலதா!

Published

on

மக்களவை தேர்தலில் திருச்சி மக்களவை தொகுதி அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவர் இளங்கோவன் தேமுதிக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். ஒவரை ஆதரித்து திருச்சில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்.

தமிழகத்தின் நடுவில், மையப்பகுதியில் உள்ள மாவட்டம் திருச்சி. இந்த திருச்சியை தமிழகத்தின் தலைநகராக மாற்றினால் எல்லா மாவட்டத்துக்கும் பொதுவானதாக இருக்கும் என்ற கருத்து நீண்ட காலமாக இருக்கிறது. ஆனால் திருச்சியை தலைநகராக்கினால் மதுரை போன்ற பிரபலமான மாவட்டங்களும் தங்கள் பங்கிற்கு போட்டியாக வரும் இதனால் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும்.

இந்நிலையில் தனது தேர்தல் பிரச்சாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்றுவோம் என வாக்குறுதி அளித்துள்ளார். பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரேமலதா, எம்ஜிஆரின் கனவுப்படி திருச்சியை இரண்டாவது தலைநகராகக் கொண்டுவர எல்லாவிதமான முயற்சியும் எடுக்கப்படும். திருச்சியில் சர்வதேச விமான நிலையம் இருப்பதால் ஏற்றுமதி வர்த்தகத்தை மேம்படுத்த எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என பேசினார். மக்களைவைத் தேர்தலில் வெற்றி பெற்று எப்படி திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்றுவோம் என பிரேமலதா வாக்குறுதி அளிக்கிறார் என்ற கேள்விகளும் எழுகின்றன.

Trending

Exit mobile version