தமிழ்நாடு

திமுக எம்பி திருச்சி சிவா மகன், பாஜகவில் இணைகிறாரா?

Published

on

திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் இணையவிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பரப்பை ஏற்படுத்தி உள்ளது

திமுக எம்பி திருச்சி சிவா சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்பதும் அவர் பாராளுமன்றத்தில் ஆவேசமாக பேசுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் திமுக மாநிலங்களவை குழுத் தலைவராகவும் கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருக்கும் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைய முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து அவர் பேசியபோது ’கடந்த 15 ஆண்டுகளாக திமுகவுக்காக நான் பணியாற்றி வருகிறேன் என்றும் ஆனால் நான் கனிமொழி ஆதரவாளர் என்பதால் கட்சித் தலைமையால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறேன் என்றும் என்னையும் எனது மனைவி குழந்தைகளையும் எனது தந்தை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் எனக்கு திமுகவில் எந்த பதவியும் கிடைக்காமல் எனது தந்தை தடுத்து வருகிறார் என்றும் அவரது நடவடிக்கை குறித்து கட்சி தலைமைக்கு தெரியப்படுத்தியும் கூட எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதனால் பாஜகவில் சேர முடிவு எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார் .

தமிழகத்தில் பாஜக ஆட்சி விரைவில் அமையும் என்றும் வரும் பத்தாம் தேதி மதுரையில் பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் சேர உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version