தமிழ்நாடு

மின்னணு வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய இதைச் செய்யுங்க!- தேர்தல் ஆணையத்துக்கு திருச்சி சிவாவின் ஐடியா

Published

on

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக அனைத்துத் தேர்தல்களும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலமே நடைபெறுகிறது. இந்த இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால், இதுவரை இந்த வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதற்கான தரவுகள் எங்கும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் தேர்தலுக்குத் தேர்தல் வாக்கு இயந்திரங்களின் உறுதித் தன்மை குறித்து கேள்வி எழுப்பப்படாமலும் இல்லை. இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய சில கோரிக்கைகளை தேர்தல் ஆணையத்துக்கு வைத்துள்ளார். 

அவர் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தது குறித்து கூறியதாவது:-

மின்னணு இயந்திர வாக்குப்பதிவுகளில் முறைகேடு நடைபெறாமல் தடுக்க, ஜாமர் கருவிகளை பொறுத்த வேண்டும் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தேர்தலின் நம்பகத்தன்மையை மனதில் வைத்துப் புதிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதை எடுத்துக் கூறியுள்ளோம். மேலும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மின்னணு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளில் ஜாமர் கருவிகள் வைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளோம். இதன் மூலம் முறைகேடுகளைத் தவிர்க்க முடியும்.

தேர்தல் ஆணையம் தரப்பில், பிரச்சனைக்குரிய சில வாக்குச் சாவடிகளின் மின்னணு இயந்திரங்கள் வைப்பு அறையில் மட்டும் சிசிடிவி கேமரா வைக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. அனைத்து அறைகளுக்கும் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட வேண்டும். 24 மணி நேரமும் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஏதுவாக வெப் லைவ் ஸ்டிரீமிங்கையும் செய்ய வேண்டும். இவை அனைத்து குறித்தும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம் எனக் கூறியுள்ளார் திருச்சி சிவா.

Trending

Exit mobile version