சினிமா செய்திகள்

ட்ரெண்டாகும் ஹேப்பி வெட்டிங் டே அஜித் ஷாலினி ஹேஷ்டேக்!

Published

on

தல அஜித்துக்கும் நடிகை ஷாலினிக்கும் இன்று 19வது திருமண நாள். 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி அமர்களம் படத்தின் மூலம் ஏற்பட்ட காதல் திருமணமாக மலர்ந்தது.

நடிகர் அஜித் மற்றும் ஷாலினிக்கு ட்விட்டரில் தல ரசிகர்கள் ஹேப்பி வெட்டிங் டே அஜித் ஷாலினி என்ற ஹேஷ்டேகை உருவாக்கி வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

நடிகர் அஜித்தின் நடிப்பில் இந்த பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது மட்டுமின்றி 100 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

மேலும், எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தின் ஒவ்வொரு அப்டேட்ஸும் அஜித் ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைத்து வரும் நிலையில், அஜித்தின் திருமண நாள் கொண்டாட்டம் அவர்களை மேலும் குஷி படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version