சினிமா செய்திகள்

டிரெண்டிங் வார்: அடிச்சு தூக்கு புரமோவை பின்னுக்குத் தள்ளிய இளமை திரும்புதே!

Published

on

பொங்கல் ரேசில் விஸ்வாசம், பேட்ட போட்டி துவங்கியதில் இருந்தே, டீஸர், டிரெய்லர், பாடல்கள், மற்றும் பாடல் புரமோ வீடியோக்கள் என அனைத்தும் டிரெண்டிங்கில் மாறி மாறி முதலிடம் பிடித்து, ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல என தங்களது ரசிகர்களால் நிரூபித்து வருகின்றன.

விஸ்வாசம் படத்தின் அடிச்சு தூக்கு புரமோ வெளியாகி டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்த நிலையில், நேற்று வெளியான பேட்ட படத்தின் இளைமை திரும்புதே பாடல் 19 மணி நேரத்தில் 10 லட்சம் பார்வைகளை தாண்டி முதலிடத்தை பிடித்துள்ளது.

மேலும், பாடலில் ரஜினி மிகவும் யங்காகவும், எனர்ஜியுடனும் காட்சியளித்து ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version