தமிழ்நாடு

லாஸ்ட் பென்ச்லிருந்து ஃபர்ஸ்ட் பென்ஞ்சுக்கு போகும் மாப்பிள்ளை: டிஆர்பி ராஜா பாராட்டு

Published

on

நேற்று தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியான நிலையில் இன்று தமிழக முதல்வராக முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் பதவி ஏற்க உள்ளனர். இந்த நிலையில் அமைச்சர்கள் செலக்சன் குறித்து பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கல்வி அமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் அன்பில் மகேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

முதன் முதலாக தமிழகத்தில் இளைஞர் ஒருவர் கல்வி அமைச்சராக பொறுப்பு ஏற்க உள்ளார் என்றும், நல்ல படித்த இளைஞர் சுறுசுறுப்பான ஒருவர் கல்வி அமைச்சராக பொறுப்பு ஏற்பது அந்த துறைக்கே மிகப்பெரிய வளர்ச்சிக்கு உரியதாக இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கல்வி அமைச்சராக பொறுப்பு ஏற்க இருக்கும் அன்பில் மகேஷ் அவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து கொண்டு வரும் நிலையில் டிஆர்பி ராஜா தனது டுவிட்டரில் லாஸ்ட் பென்சில் இருந்து பாஸ்ட் பெஞ்சுக்கு போகும் அருமை மாப்பிள்ளை அவர்களுக்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:

லாஸ்ட் பென்ச்லிருந்து ஃபர்ஸ்ட் பென்சிக்கு போகும் அருமை மாப்பிள்ளை அன்பில் மகேஷ் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்! லாஸ்ட் பென்ச்சில் தவித்துக்கொண்டிருக்கும் ஏழை எளிய மாணவர்களின் வாழ்க்கையை முன்னேற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அவருடையது.

seithichurul

Trending

Exit mobile version