தமிழ்நாடு

3-ம் பாலினத்தவருக்கு 3 மாதங்களில் தடுப்பூசி.. அரசுக்கு அதிரடி உத்தரவு!

Published

on

3-ம் பாலினத்தவருக்கு அடுத்த 3 மாதத்தில் தடுப்பூசி செலுத்துவதைத் தமிழக அரசு உறுதி செய்து இருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நிவாரண நிதி 4000 ரூபாய் மற்றும் இலவச கொரோனா தடுப்பூசி தங்களுக்கு வழங்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் கிரேஸ் பானு என்ற திருநங்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசு சார்பாக வாதாடிய தலைமை வழக்கறிஞர் ஷண்முக சுந்தரம், 3-ம் பாலினத்தவருக்கு கொரோனா நிவாரண நிதி முதல் தவணை 2000 ரூபாய் வழங்கப்பட்டுவிட்டது. 2-ம் தவணை விரைவில் வழங்கப்படும் என தெரிவித்தார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 3-ம் பாலினத்தவருக்கு 3 மாதங்களில் தடுப்பூசி செலுத்தியதை அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

மே மாதம் வரையில் இந்தியா  முழுவதிலும் 5.22 சதவீத 3-ம் பாலினத்தவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

seithichurul

Trending

Exit mobile version