இந்தியா

16 வயது சிறுவனை பலாத்காரம் செய்த திருநங்கை: மீண்டும் தொடர்புகொண்ட போது சிக்கிய குற்றவாளி!

Published

on

கேரளாவில் முதன்முறையாக பாலியல் பலாத்கார வழக்கில் திருநங்கை ஒருவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். திருவனந்தபுரம் விரைவு சிறப்பு நீதிமன்றம், 16 வயது சிறுவனை பலாத்காரம் செய்த வழக்கில் சச்சு சாம்சன் (34) என்ற திருநங்கைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் 25,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. சாம்சன் அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.

#image_title

குற்றவாளி சச்சு சாம்சன் திருவனந்தபுரம் அருகே உள்ள அனத்தலாவட்டத்தில் வசித்து வந்தார். இந்த சம்பவம் 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 23 அன்று திருவனந்தபுரத்திற்கு ரயிலில் சென்று கொண்டிருந்த சிறுவனுடன் திருநங்கை சாம்சனுக்கு நட்பு ஏற்பட்டது. பின்னர், சிறுவனை கேரளாவின் தலைநகரின் மையப்பகுதியில் உள்ள தம்பனூரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் சாம்சன்.

இந்த சம்பவத்தால் பயந்துபோன சிறுவன் தன் குடும்பத்தினரிடம் எதையும் தெரிவிக்கவில்லை. அதன்பிறகு பலமுறை சிறுவனைத் தொடர்பு கொண்டு அவரைச் சந்திக்க சாம்சன் முயன்றார், ஆனால் சிறுவன் உடன்படவில்லை. இதனையடுத்து சாம்சன் சிறுவனுக்கு தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பினார். அவரது எண்ணை சிறுவன் பிளாக் செய்தபின்னரும் ஃபேஸ்புக் மெசஞ்சரில் மெஸ்ஸேஜ் அனுப்பி வந்தார்.

இந்நிலையில் சிறுவனின் தாய் சிறுவனின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதையும் அவன் பதற்றமாக இருப்பதையும் கவனித்தார். இதனையடுத்து ஃபேஸ்புக் மெசஞ்சரில் வந்த மெஸ்ஸேஜ்களை கண்ட தாய், சாம்சனுக்கு பதிலளிக்கத் தொடங்கினார், மேலும் தனது மகன் சந்தித்த பாலியல் தாக்குதலை அறிந்துகொண்ட தாய் போலீசில் புகார் அளித்தார். காவல்துறையின் வழிகாட்டுதலின்படி, சிறுவனின் தாய் சாம்சனுக்கு மெஸ்ஸேஜ் செய்து அவனை தம்பானூருக்கு வரச் செய்தார். இதனையடுத்து சாம்சனை போலீசார் தம்பனூரில் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றவாளி திருநங்கை சாம்சனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் அபராதமும் விதித்துள்ளது. கேரளாவில் இதுபோன்ற ஒரு வழக்கில் திருநங்கை ஒருவர் தண்டிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

seithichurul

Trending

Exit mobile version