தமிழ்நாடு

க்யூஆர் கோட் ஸ்கேன் செய்தால் ரயில் டிக்கெட்: ரயில்வே துறையின் புதிய வசதி அறிமுகம்!

Published

on

கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்தால் போதும் ரயில் டிக்கெட்டை பெறும் வசதியை தென்னக ரயில்வே புதிதாக அறிமுகம் செய்துள்ளது.

தென்னக ரயில்வே அவ்வப்போது ரயில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்து தருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக ரயில் டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்ப்பதற்காக தானியங்கி டிக்கெட் இயந்திரத்தை முக்கிய ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தற்போது அதில் மேலும் ஒரு புதிய வசதியாக தானியங்கி டிக்கெட் வினியோகம் செய்யும் இயந்திரத்தில் தோன்றும் கியூஆர் கோடு ஸ்கேன் செய்தால் ரயில் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த டிக்கெட்டை பெறுவதற்கான பணத்தை ஜிபே, போன்பே, பேடிஎம் போன்ற செயல்கள் மூலமே செலுத்தி கொள்ளலாம் என்ற வசதியும் கூடுதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் மற்றும் நகர்ப்புற ரயில் டிக்கெட்டுகளை இந்த கியூஆர் கோடு ஸ்கேன் செய்வதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதுமட்டுமின்றி நடைமேடையில் டிக்கெட்டையும் இதே வசதியின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் இந்த வசதி மூலம் சீசன் டிக்கெட்டை புதுப்பித்துக் கொள்ளும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

தென்னக ரயில்வேயின் இந்த அறிவிப்பு அனைத்து பயணிகளுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version