பிற விளையாட்டுகள்

ஜியோவுக்கு அதிகம், வோடஃபோனுக்கு குறைவு: அபராதம் விதித்த ட்ராய்!

Published

on

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்காததால் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன், ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ரிலையன்ஸ் ஜியோவுக்கு குறைந்தபட்சமாக வோடஃபோன் நிறுவனத்துக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் காலாண்டில் பல்வேறு சேவை தரநிலைகளிலிருந்து தவறியதால் ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன், ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்குத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் அபராதம் விதித்துள்ளது. வாடிக்கையாளர் சேவை மற்றும் நிறுவனம் பதிலளித்துள்ள அழைப்புகளின் விகிதம் போன்ற சேவை தரநிலைகளின் அடிப்படையில் இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

இதில் அதிகபட்சமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு ரூ.34 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனத்துக்கு ரூ.11 லட்சம் அபராதமும், ஐடியா நிறுவனத்துக்கு ரூ.12.5 லட்சமும் குறைந்தபட்சமாக வோடஃபோன் நிறுவனத்துக்கு ரூ.4 லட்சமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பல நிறுவனங்களும் அபராதத்தைச் செலுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version