தமிழ்நாடு

கொடநாடு கொலை: முதல்வருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த டிராபிக் ராமசாமி!

Published

on

கொடநாடு கொலை விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த பரபரப்புக்கு காரணம் இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுதான்.

தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு கொலை குற்றவாளி எனவும் அவர் ஐந்து கொலைகளை செய்துள்ளார் எனவும் மிகவும் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை முன்வைக்கிறார். இந்த விவகாரத்தை தமிழக அரசியல் கட்சியினரும் கையிலெடுத்து மத்திய சிறப்புக்குழு விசாரணைக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

இந்நிலையில் இந்த கொலை மற்றும் கொள்ள சம்பவங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பேட்டியளித்த இந்த வழக்கில் தொடர்புடைய சயன் மற்றும் மனோஜ் நேற்று டெல்லியில் வைத்து தமிழக தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு தமிழகம் கொண்டு வரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இதனையடுத்து பிரபல சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி இந்த கொடநாடு விவகாரத்தை தற்போது கையிலெடுத்துள்ளார். அவர் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், முதல்வர் மீதே புகார் உள்ளதால் அதனை அவரின் கீழ் இயங்கும் தமிழக போலீசார் விசாரிப்பது முறையாக இருக்காது, விசாரணை நியாயமாகவும் நடைபெறாது. சிபிஐ விசாரித்தால்தான் இதற்கு பின்னால் இருக்கும் உண்மைகள் வெளிவரும். எனவே சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அவர் கூறியுள்ளார். இந்த மனு மீதான விசாரணைக்கு தேதி ஏதும் இதுவரை குறிப்பிடவில்லை.

seithichurul

Trending

Exit mobile version