Connect with us

சினிமா செய்திகள்

தடம் ஒரு தரமான சம்பவம் – தடம் விமர்சனம்!

Published

on

தடையற தாக்க படத்திற்கு அருண் விஜய்க்கு இன்னொரு ஹிட் கொடுக்க இயக்குநர் மகிழ்திருமேனி பதித்திருக்கும் தடம் தான் இந்த படம்.

சமீபகாலமாக சிறந்த கதை தான் தன்னை முழு ஹீரோவாக மாற்றும் என்பதை நன்றாக புரிந்து வைத்துள்ள நடிகர் அருண் விஜய், இந்த படத்தில் எழில், கவின் என இரு வேடங்களில் இரு வேறு வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை மேலும், ஒரு சிறந்த நடிகராக புரொமோட் செய்துள்ளார்.

ஒரே மாதிரியான உருவ ஒற்றுமை கொண்ட அண்ணன் – தம்பி ஒரு கொலை வழக்கில் சிக்கிக் கொள்கின்றனர். இதில் யார் கொலையாளி என்பதை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறும்படியான வித்தியாசமான கதைக் களத்தை இயக்குநர் மகிழ்திருமேனி எடுத்துக் கையாண்டு இருக்கும் விதத்திலேயே சிக்ஸர் அடித்துள்ளார்.

எழில், கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி நடத்துபவராகவும், அவரது சகோதரர் கவின் யோகிபாபுவுடன் இணைந்து திருட்டுத் தொழிலும் ஈடுபட்டு வருபவராகவும் நடிப்பு, உடல்மொழி என பார்க்கும் ஆடியன்சுக்கு எந்த இடத்திலும் எழில் யார் கவின் யாரென்ற குழப்பமே வராமல் கதையை நகர்த்தி இருக்கும் யுக்தி பக்காவாக படத்திற்கு உதவியுள்ளது.

பிளாஷ்பேக்கில் அம்மாவாக வரும் சோனியா அகர்வால், இப்படி எல்லாம் ஒரு அம்மா இருப்பாரா? என்ற கேள்வியை ரசிகர்கள் மனதில் விதைக்கிறது.

எழிலை காதலிக்கும் நாயகியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். கவின் காதலிக்கும் நாயகியாக ஸ்மிருதி நடித்துள்ளார். ஆனால், படத்தில் அதிகமாக பாடல்கள் மற்றும் நகைச்சுவை டிராக்குகள் என படத்தின் திரைக்கதையை திசை திருப்பி விடாமல், சீட் நுனியில் ஆடியன்ஸை கட்டிப் போடும் விதத்தில் திரைக்கதை ட்விஸ்ட் மற்றும் திருப்புமுனைகளுடன் அமைந்துள்ளது பாராட்டுதல்குரியது.

இரு நாயகிகளும், சிறிது நேரம் வந்துவிட்டு பின்னர் காணமல் போகின்றனர். அது படத்திற்கு பலமாகவே அமைந்துள்ளது. போலீஸ் அதிகாரியாக வரும் வித்யா பிரதீப்புக்கு தான் கூடுதல் கதாபாத்திரம், அதனை அறிந்து அவரும் சிறப்பாக நடித்துள்ளார்.

கிளாஸ் அருண் விஜய்யும், லோக்கல் அருண் விஜய்யும் அண்ணன் தம்பிகள் என தெரிய வரும் இடம் தான் படத்தில் பெரிய ட்விஸ்ட். அதை ஓப்பன் செய்ததற்கு மன்னிக்கவும், ஆனால், படத்தை பார்க்கும் பலருக்கும் இதுபோன்ற பல படங்களில் உருவ ஒற்றுமை ஒரே மாதிரியாக இருப்பவர்கள் அண்ணன் தம்பியாகத்தானே இருக்க முடியும் என்பதால், அது பெரிய விசயம் கிடையாது. ஆனால், திரைக்கதையில் இயக்குநர் மகிழ்திருமேனி அந்த இடத்தை கையாண்டுள்ள விதம் கூடுதல் சிறப்பை படத்திற்கு சேர்த்துள்ளது.

அறிமுக இசையமைப்பாளர் அருண்ராஜ் இசையில் வரும் இணையே.. பாடல் இனிமையாக இருக்கிறது. கோபிநாத்தின் ஒளிப்பதிவு ஒரே இடத்தில் பல இடங்களில் படம் நகர்ந்தாலும், சளிப்பை தட்டாத வண்ணம் ஷாட்ஸ்களை அமைத்துள்ளது.

அமெரிக்கா, ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில், ஒரே உருவம் கொண்ட சிலர் நிகழ்த்திய உண்மையான கொலை சம்பவங்களை படத்தின் இறுதியில் இயக்குநர் காட்டும் போது, மெய்சிலிர்க்கிறது.

நன்றாக ஆராய்ந்து புதிய கதையை தமிழ் ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என மெனக்கட்டு டீட்டெய்லிங் செய்து படத்தை அதே விறுவிறுப்புடன் கொடுத்துள்ள மகிழ்திருமேனிக்கும், எழில், கவின் என இரு வேறு நடிப்பை நம்பும்படியாக கொடுத்து அசத்தியுள்ள அருண் விஜய்க்கும் இந்த படம் மாபெரும் வெற்றியை தரும் என்பதில் சந்தேகமில்லை.

சினி ரேட்டிங்: 3.5/5.

இவளை யார் கட்டுப்படுத்துவாங்க! எக்ஸ்மென்: டார்க் பீனிக்ஸ் டிரைலர் ரிலீஸ்!

இந்தியா46 நிமிடங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்1 மணி நேரம் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!