தமிழ்நாடு

அந்த 7000 கோடி ரூபாயை தடுப்பூசி வாங்க செலவிடுங்கள்: மத்திய அரசுக்கு டி.ஆர்.பாலு கோரிக்கை!

Published

on

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசி போட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் முன்வந்து தடுப்பூசிகள் போட்டுக் கொள்கின்றனர். ஆனால் அதே நேரத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதாக கூறப்படுகிறது. இன்றுகூட தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதால் சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பூசி முகாம் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தடுப்பூசி ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களை இன்று திமுக எம்பி டி.ஆர்.பாலு சந்தித்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் அதிக தடுப்பூசிகள் ஒதுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார். தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவும் போது தமிழக பாஜக தலைவர்கள் ஏன் மத்திய அரசை வலியுறுத்தவில்லை என்று கேள்வி எழுப்பிய டி.ஆர்.பாலு, தமிழகத்தின் நலன் மீது பாஜக தலைவர்கள் யாருக்கும் அக்கறை இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும் 90 சதவீத தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும் 10 சதவீத தடுப்பூசிகளை தனியாருக்கும் வழங்க வேண்டும் என்று கூறிய டிஆர் பாலு நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு தொகையான 7 ஆயிரம் கோடியை தடுப்பூசி வாங்க செலவிடலாம் என்றும் மத்திய அரசுக்கு அவர் அறிவுறுத்தியுளார். திமுக எம்.பி டிஆர் பாலு அவர்களின் இந்த யோசனையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version