இந்தியா

மார்ச் மாதத்தில் இத்தனை நாட்கள் வங்கி விடுமுறையா?

Published

on

இந்திய ரிசர்வ் வங்கியின் காலண்டரின்படி மார்ச் மாதத்தில் மட்டும் 11 நாட்கள் வங்கி விடுமுறை என்று கூறப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மார்ச் 5, மார்ச் 11, மார்ச் 22, மார்ச் 29 மற்றும் மார்ச் 30 ஆகிய ஐந்து நாட்களும், நான்கு ஞாயிறுகள் மற்றும் இரண்டு சனிக்கிழமையும் சேர்ந்து வங்கி விடுமுறை மொத்தம் 11 நாட்கள் என கடைபிடிக்கப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் ஐந்து நாட்கள் விடுமுறை என்பது அனைத்து மாநிலங்களிலும் இல்லை என்றும் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே விடுமுறை அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதுமட்டுமின்றி மார்ச் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் வேலைநிறுத்தம் கடைபிடிக்கப்படும் என வங்கி தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு நாட்களில் கணக்குகளின் வங்கி விடுமுறை நாட்கள் இன்னும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Trending

Exit mobile version