உலகம்

ஒலிம்பிக் கிராமத்தில் 10 பேர்களுக்கு கொரோனா: வீரர்கள் அச்சம்!

Published

on

ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ள கிராமத்தில் திடீரென 10 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டி ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பதும் இதனை அடுத்து இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் வீராங்கனைகள் டோக்கியோ நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டி நடைபெறும் கிராமத்தில் ஹோட்டலில் பணி செய்யும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து வீரர்கள் இருவருக்குமே கொரோனா தொற்று ஏற்பட்டதால் மொத்தம் மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மேலும் ஏழு பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் 3 பேர், பத்திரிக்கையாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என ஏழு பேர்களுக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் தற்போது ஒலிம்பிக் பகுதியில் மொத்தம் 10 பேருக்கு கொரோனா பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாகும் தேதி நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் திடீரென அடுத்தடுத்து வீரர்களுக்கும் வீரர்களை சார்ந்தவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்பதும் ஒலிம்பிக் போட்டிக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பாக கொரோனாவில் இருந்து வீரர்கள் தகுந்த வகையில் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் ஒலிம்பிக் நிர்வாகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version