சினிமா செய்திகள்
டோட்டல் தமால் டிரைலர் ரிலீஸ்!
பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், மாதுரி திக்ஷித், அனில் கபூர், சோனாக்ஷி சின்ஹா என நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள காமெடி திரைப்படமான டோட்டல் தமால் படத்தின் டிரைலர் இன்று வெளியாகி வைரலாகியுள்ளது.
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்தை இந்திர குமார் இயக்கியுள்ளார். படத்தில், சிங்கம், குரங்கு, யானை என காட்டு விலங்குகள் அனைத்தும் நேர்த்தியான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் செம காமெடியாய் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டிரைலரை பார்த்தாலே இந்த படம் லாஜிக்கில்லா மேஜிக் என்பதை சொல்லிவிட முடியும்.
இத்தனை பெரிய பட்ஜெட்டில், இத்தனை பாலிவுட் நட்சத்திரங்களை வைத்து செம ரகளையாய் உருவாக்கியுள்ள டோட்டல் தமால் படம் வரும் பிப்ரவரி 22ம் தேதி திரைக்கு வருகிறது.