பர்சனல் ஃபினான்ஸ்

சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்!

Published

on

மக்கள் பொதுவாகக் கையில் பணத்தை வைத்துக்கொள்வதை விட, வங்கி சேமிப்பு கணக்குகளில் பணத்தை வைப்பதைப் பாதுகாப்பாக இருக்க வேண்டு என்று நினைக்கின்றனர்.

அதிலும், திறமையானவர்கள் அதிக வட்டி விகிதம் அளிக்கும் சேமிப்பு கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்து வைப்பார்கள். பொதுத் துறை வங்கிகளுடன் ஒப்பிடும் போது தனியார் வங்கிகளில் அதிக வட்டி விகித லாபம் அளிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் தனியார் வங்கிகள் எல்லா நன்மைகளையும் பெற அதிக குறைந்தபட்ச இருப்பு தொடை தேவை. அதுவே பொதுத்துறை வங்கி சேமிப்பு கணக்குகள் என்றால் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் போதும்.

எனவே, சேமிப்பு கணக்குகளில் வைக்கும் பணத்திற்கு அதிக வட்டி விகித லாபம் வழங்கும், பொதுத் துறை வங்கிகள் பட்டியலை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

ஐடிபிஐ வங்கி

ஐடிபிஐ வங்கி 25 லட்சம் ரூபாய் வரையில் சேமிப்பு கணக்கில் வைக்கும் போது 3.1 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கும். இது 25 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகச் சேமிப்பு கணக்கில் பணம் வைத்து இருந்தால் 3.6 சதவீத லாபம் பெற முடியும்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தங்களது சேமிப்பு கணக்கில் வைத்துள்ள பணத்திற்கு அதிகபட்சமாக 3.1 சதவீத லாபத்தை வழங்குகிறது.

பஞ்சாப் & சிண்ட் வங்கி

பஞ்சாப் & சிண்ட் வங்கியின் சேமிப்பு கணக்கில் 20 லட்சம் ரூபாய் வரை இருப்பு வைத்து இருந்தால் 3.1 சதவீத லாபம் கிடைக்கும். 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருப்பு வைத்து இருந்தால் 3.5 சதவீத லாபம் கிடைக்கும்.

பாங்க் ஆப் இந்தியா

பாங்க் ஆப் இந்தியா வங்கி சேமிப்பு கணக்குகளில் இருப்பு வைத்துள்ள பணத்திற்கு 3 சதவீத லாபம் வழங்கப்படும்.

யூனியன் வங்கி

யூனியன் வங்கி சேமிப்பு கணக்குகளில் இருப்பு வைத்துள்ள பணத்திற்கு 3 சதவீத லாபம் வழங்கப்படும்

seithichurul

Trending

Exit mobile version