கிரிக்கெட்

2022-ம் ஆண்டின் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இவைதான் டாப் 5 போட்டிகள்!

Published

on

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

அக்டோபர் 16-ம் தேதி தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை இந்த கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.

2022-ம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இதுவரையில் நடைபெற்ற போட்டிகளில் டாப் 5 போட்டிகள் எவை என்ற பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

  • அதில் கடைசி ஓவரில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • ஜிம்பாப்வே எதிரான போட்டியில் பாகிஸ்தான் வென்றது 2-ம் இடத்தை பிடித்துள்ளது.
  • முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து – ஐர்லாந்து விளையாடிய போட்டி 3வது இடத்தை பிடித்துள்ளது.
  • யூஏஇ நெதர்லாந்து போட்டி 3வது இடத்தை பிடித்துள்ளது.
  • நமீபியா – யூஏஇ முதல் சுற்றுப் போட்டி 5வது இடத்தை பிடித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை டி20 2022 கிரிக்கெட் தொடரில் மொத்தம் 16 அணிகள் விளையாடி வருகின்றன. மொத்தம் 45 போட்டிகளை நடைபெற உள்ளன.

நவம்பர் 9-ம் தேதி குரூப் 1 வெற்றியாளர் மற்றும் குரூப் 2 ரன்னர் இவரும் மோதுவார்கள். நவம்பர் 10-ம் தேதி குரூப் 2 வெற்றியாளரும், குரூப் 1 ரன்னரும் மோதுவார்கள். இதில் யார் எந்த இரண்டு அணிகள் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் இருவருக்கும் நவம்பர் 13-ம் தேதி இறுதி போட்டி நடைபெறும்.

2007-ம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பையைப் பாகிஸ்தான் எதிராக இந்தியா வென்றது. தொடர்ந்து 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் வென்றது. 201-ம் ஆண்டு இங்கிலாந்து வெறி பெற்றது. 2012-ம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. 2014-ம் ஆண்டு இறுதிப் போட்டி வரை சென்ற இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோற்றுப்போனது. 2016-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணியும், 2021-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவும் வெற்றுப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version