ஆரோக்கியம்

குளிர் காலத்தில் ஏற்படும் பொடுகு தொல்லையை எளிமையாகக் கட்டுப்படுத்த 3 வழிகள்!

Published

on

குளிர் காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் பொதுவான ஒரு நோய் பொடுகு என கூறலாம். கோடைக் காலத்தை விட குளிர் காலத்தில் இதனை அதிகம் காண முடியும்.

அதிக குளிரின் காரணமாக உச்சந்தலையிலிருந்து தோல்கள் உரிந்து, உலந்து மற்றும் செதில்கள் அதிகம் காணப்படும். இப்படி ஏற்படும் பொடுகு தொல்லையை எளிமையாகக் கட்டுப்படுத்துவது எப்படி என ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா சமூக வலைத்தளங்களில் செய்துள்ள பதிவை விளக்கமாகப் பார்க்கலாம்.

வேப்பிலை சாறு

வேப்பிலை சாறு உச்சந்தலையைச் சுத்தம் செய்ய உதவும். தலையில் உள்ள அடைபட்ட துளைகளை அழித்து முடி வளர்ச்சியை மேம்படுத்தும். வேப்பிலை பொடுகு சிகிச்சைக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. வேப்ப இலைச் சாற்றைத் தலையில் தடவி, சிறு நேரத்திற்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவுவதன் மூலம் பொடுகு தொல்லையிலிருந்து விடுபடலாம்.

நெல்லிக்காய் பொடி & தயிர்

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. நெல்லிக்காய் பொடி பொடுகை போக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. தயிரில் ஈஸ்டை கட்டுக்குள் வைத்திருக்கும் நட்பு பாக்டீரியாக்கள் உள்ளன. தயிர், இரண்டு தேக்கரண்டி நெல்லிக்காய் பொடியைக் கலந்து தலையில் தடவி வந்தால் பொடுகு தொல்லை குறையும்.

மன அழுத்தத்தைக் குறைத்தல்

மன அழுத்தம் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்தும். பொடுகை ஏற்படுத்தும் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும் திறனைக் குறைக்கும். மேலும், மன அழுத்தம் பெரும்பாலும் பொடுகுக்கான பொதுவான காரணங்களில் ஒன்றான செபொர்ஹெக் டெர்மடிடிஸின் அதிகரிக்கும் காரணமாகவும் உள்ளது. தொடர்ந்து நடைப்பயிற்சி அல்லது யோகா பயிற்சி செய்யாது மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முயலவும்.

மேலே கூறிய இந்த மூன்றையும் கடைப்பிடித்தால் எளிதாக பொடுகு தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version