வணிகம்

இந்திய ரியல் எஸ்டேட் கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியீடு.. முதல் இடத்தில் மும்பை பாஜக எம்எல்ஏ..!

Published

on

உலகளவில் சொந்தமாக வீடு இல்லாதவர்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ள நிலையில் இந்தியாவின் டாப் 100 ரியல் எஸ்டேட் முதலாளிகளின் செல்வ மதிப்பு 2018-ம் ஆண்டு 27 சதவீதம் வரை உயர்ந்து 2.37 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாக ஹூரூன் ரியல் எஸ்டேட் கோடீஸ்வர்கள் அறிக்கை கூறுகின்றது.

2017-ம் ஆண்டு இந்தியாவின் நம்பர் ரியல் எஸ்டேட் கோடீஸ்வரராக இருந்த டிஎல்எப் குழும நிறுவனம் கே பி சிங் டாப் 10 இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

முதல் இடத்தில் பாஜக எம்எல்ஏ

ஹூரூன் கோடீஸ்வார ரியல் எஸ்டேட் முதலாளிகளில் 52 வயதான பாஜக எம்எல்ஏ மங்கல் லோதா 27,150 கோடி ரூபாய் செல்வ மதிப்புடன் முதல் இடத்தினைப் பிடித்துள்ளார்.

செல்வ மதிப்பு

சென்ற வருடம் இவரது செல்வ மதிப்பு 18,610 கோடி ரூபாயாக இருந்து வந்த நிலையில் 2018-ம் ஆண்டு 22 சதவீதம் என 8,450 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. லோதா சில ஆண்டுகளுக்கு முன்பே ரியல் எஸ்டேட் துறையில் காலூன்றியதாகவும் மும்பையில் உள்ள டிரம்ப் டவர்ஸ் உட்படப் பல முக்கியக் கட்டிடங்களை இவரது கட்டுமான நிறுவனம் கட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இரண்டாம் இடம்

லோதாவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் பெங்களூருவை சேர்ந்த எம்பஸி குழுமத்தின் ஜித்தேந்திர விர்வானி உள்ளார். இவரது செல்வ மதிப்பு 2018-ம் ஆண்டு 23,160 கோடி ரூபாயாக உள்ளது.

மூன்றாம் இடம்

2017-ம் ஆண்டு இந்தியாவின் நம்பர் ரியல் எஸ்டேட் கோடீஸ்வரராக இருந்த டிஎல்எப் குழும நிறுவனம் கே பி சிங் டாப் 10 இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஆனால் அவரது மகன் ராஜிவ் சிங் 17,690 கோடி ரூபாய் செல்வ மதிப்புடன் மூன்றாம் இடத்தினைப் பிடித்துள்ளார்.

டாப் 100

இந்தியாவின் டாப் 100 ரியல் எஸ்டேட் முதலாளிகளின் செல்வ மதிப்பு 2018-ம் ஆண்டு 27 சதவீதம் உயர்ந்து 2,36,610 கோடி ரூபாயாக உள்ளது. இதுவே 2017-ம் ஆண்டு 1,86,700 கோடி ரூபாயாக இருந்தது.

ஹூரூன் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலி இந்தியாவிலேயே பிறந்த வளர்ந்த ரியல் எஸ்டேட் கோடீஸ்வரர்கள் மட்டுமே உள்ளனர்.

நகரம் வாரியான அறிக்கை

டாப் 100 ரியல் எஸ்டேட் கோடீஸ்வர்களில் மும்பையினைச் சேர்ந்தவர்கள் மட்டும் 35 நபர்கள் ஆவர். இரண்டாம் இடத்தில் 22 நபர்களுடன் டெல்லியும், 21 நபர்களுடன் பெங்களூருவும், புனேவிலிருந்து 5 நபர்களும் உள்ளனர்.

பெண்கள்

இந்தியாவின் டாப் 100 ரிலயல் எஸ்டேட் கோடீஸ்வர்கள் பட்டியலில் 9 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் டிஎல்எப் ரேனுகா தாழ்வர் 19வது இடத்திலும் பெண்கள் பட்டியலில் முதல் இடத்திலும் உள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version