தமிழ்நாடு

முழு ஊரடங்கு தினத்தில் வடபழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் அதிருப்தி!

Published

on

நாளை முழு ஊரடங்கு தினத்தில் வடபழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் புகழ்பெற்ற முருகன் கோவில்களில் ஒன்று வடபழனி முருகன் கோவில் என்பதும் இந்த கோவிலில் கடந்த 2007ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்த நிலையில் 15 ஆண்டுகள் கழித்து நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வடபழனி கோவில் கும்பாபிஷேகத்தை நேரில் காணவேண்டும் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் மிகுந்த விருப்பத்துடன் இருந்த நிலையில் நாளை முழு ஊரடங்கு தினத்தில் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வடபழனி முருகன் கோவிலில் நாளை பக்தர்கள் இல்லாமல் கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும் ஆனால் அதே நேரத்தில் 10:30 மணி முதல் 11 மணிவரை கும்பாபிஷேகம் நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

நாளை நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் ஏற்கனவே கோயிலுக்குள் 108 குண்டலங்கள் உடன் யாகசாலை பூஜைகள் கடந்த வியாழக்கிழமை முதல் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாளை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முக்கிய தொலைக்காட்சிகள் மற்றும் யூடியூப் சேனல்கள் மூலம் கும்பாபிஷேக விழாவை நேரலையாக ஒளிபரப்ப கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.

டாஸ்மார்க் உள்ளிட்ட அனைத்து கடைகளும் தினந்தோறும் திறந்து இருக்கும் நிலையில் கோவில் கும்பாபிஷேகத்தை மட்டும் நேரில் காண வாய்ப்பு இல்லாமல் இருப்பதாக பக்தர்கள் அதிர்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version