சினிமா செய்திகள்

நாளை தொடங்குகிறது விஜய்சேதுபதி – விஜய்சந்தர் படம்!

Published

on

வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய்சந்தர் நடிகர் விஜய்சேதுபதியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குவுள்ளார் என்ற செய்திகள் சமீபத்தில் வெளியாகின.

இந்நிலையில், அந்த படத்தின் பட பூஜை மற்றும் ஷூட்டிங் நாளை (மார்ச் 4) துவங்குகிறது. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக, நிவேதா பெத்துராஜ் மற்றும் ராஷி கண்ணா நடிக்கவுள்ளனர்.

விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் பட பூஜை நாளை ஐதராபாத்தில் துவங்குகிறது. விஜய்சேதுபதியுடன் முதன்முறையாக நடிகர் சூரி காமெடியில் இணைகிறார்.

மேலும், இந்த படத்தில் நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்தர், ஜான் விஜய், ஸ்ரீமான் உள்ளிட்ட நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர்.

இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். மிக விரைவில் படத்தின் ஷூட்டிங் முடிக்கப்பட்டு படம் ரிலீசாகும் எனவும் இயக்குநர் விஜய் சந்தர் தெரிவித்துள்ளார்.

அவரது முந்தைய படங்களான வாலு மற்றும் ஸ்கெட்ச் படு தோல்வியை சந்தித்த நிலையில், விஜய்சேதுபதியின் வரவு அவருக்கு வெற்றியை தருமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version