தமிழ்நாடு

அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை: கலெக்டர்கள் அறிவிப்பு!

Published

on

அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை என ஒரு சில மாவட்ட கலெக்டர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்

தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நாளை அதாவது செப்டம்பர் 24 ஆம் தேதி ஒருசில மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் விடுமுறை என மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலை ஒட்டி ஆசிரியர்களுக்கு நாளை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதனை அடுத்து நாளை திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் விடுமுறை என திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். அதேபோல் வேலூர் மாவட்ட கலெக்டரும் அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை விடுமுறை என அறிவித்துள்ளார்.

அனேகமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் ஒன்பது மாவட்டங்களுக்கும் நாளை பள்ளிகள் விடுமுறை ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து சனி ஞாயிறு விடுமுறை என்பதால் இனி மீண்டும் பள்ளி திங்கட்கிழமை தான் நடைபெறும் என்று கூறப்பட்டு வருகிறது.

Trending

Exit mobile version