தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை 16 சிறப்பு ரயில்கள் ரத்து: மெட்ரோ ரயில் இயங்குமா?

Published

on

உலகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை அடுத்து நாளை முழு ஊரடங்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் நாளை தமிழகத்தில் முழு ஊரடங்கை அடுத்து 16 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை மற்றும் மே இரண்டாம் தேதி முழு ஊரடங்கு என்பதால் இந்த இரண்டு நாட்களிலும் 16 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மதுரை கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் திருச்சி-காரைக்குடி சிறப்பு ரயில், மதுரை-விழுப்புரம் சிறப்பு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னை-புதுச்சேரி, திருச்சி-கரூர் வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் நாளை ரயில் நிலையங்களில் முன்பதிவு நிலையங்களும் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை முழு ஊரடங்கு இருந்தாலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் மருத்துவர்கள் காவல்துறையினர் நர்சுகள் மருத்துவ ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய பணி ஊழியர்களுக்காக இந்த ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version