இந்தியா

தடுப்பூசி போட்டு கொண்டால் தக்காளி இலவசம்: நூதன அறிவிப்பால் குவிந்த பொதுமக்கள்!

Published

on

கொரனோ தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்ற நூதன அறிவிப்பின் மூலம் பொதுமக்களை கொரோனா வைரஸ் தடுப்பூசி போட வைக்கும் முயற்சியை சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நகராட்சி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜாப்பூர் என்ற நகராட்சி ஊழியர்கள் மக்களிடையே கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் அப்பகுதி மக்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்ற அறிவிப்பை பிஜாபூர் நகராட்சி அறிவித்தது. இதனை அடுத்து பலர் கொரோனா தடுப்பூசியைப் போட முன் வந்துள்ளனர் என்பதும் தடுப்பூசி போட்டுக் கொண்டு ஒரு கிலோ தக்காளியை இலவசமாக பெற்று வழங்கி செல்வதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

புதுவிதமான இந்த நூதன அறிவிப்புக்கு வெற்றி கிடைத்துள்ளதாகவும் இந்த அறிவிப்புக்குப் பின்னர் பிஜாபூர் நகராட்சியில் உள்ள பலர் தற்போது தடுப்பூசியை விரும்பி வந்து போட்டுக் கொண்டு உள்ளனர் என்றும் சத்தீஸ்கர் மாநில நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்த புகைப்படங்களும் சமூகவலைதளத்தில் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version