இந்தியா

மீண்டும் எகிறிய தக்காளி விலை: கிலோ ரூ.160 என்பதால் அதிர்ச்சி!

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை 150 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையாகி வந்தது என்பதும் இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் தற்போது தக்காளி விலை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தக்காளி விலை ரூபாய் 100 வரை விற்பனையாகி வருவதாக பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் தக்காளி விலை உயர்ந்தது போலவே அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளாவில் தக்காளி விலை ரூபாய் 140 முதல் 160 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் கர்நாடக மாநிலத்தில் 150 க்கும் மேலாக விற்பனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பெய்த தொடர் கனமழை காரணமாக தக்காளி விளைச்சல் குறைவாக இருந்ததாகவும் வெள்ள நீரில் தக்காளி அழுகி போய்விட்டதாலும், தக்காளி விலை உயர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது 80 ரூபாய் வரை முதல் 100 ரூபாய் வரை தக்காளி விலை விற்பனையாகி வருகிறது என்றாலும் பண்ணை கடைகள் மட்டும் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதால் மிக விரைவில் தக்காளி விலை கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தை போலவே கேரளா மற்றும் கர்நாடகத்தில் தக்காளி விலையை குறைக்க அம்மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version