சினிமா
‘F*****s’- கொரோனா விதிகளை மீறிய படக்குழு… கொச்சை கொச்சையாக திட்டிய Tom Cruise!
உலகின் மிகவும் பிரபலமான சினிமா நட்சத்திரங்களின் பட்டியலில் டாப்பில் இருப்பவர் டாம் குரூஸ். ‘மிஷின் இம்பாஸிபிள்’ சீரிஸுக்காக அவருக்கு உலகின் பட்டித் தொட்டியெல்லாம் ரசிகர்கள் எராளம். அந்த சீரிஸின் 7வது பாகத்தைத் தற்போது படம் எடுத்து வருகிறார்கள்.
இங்கிலாந்தில் மிஷின் இம்பாஸிபிள் படத்திற்கான படப்பிடிப்பு கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளுடன் நடந்து வருகிறது. அப்படி நடந்து வரும் படப்பிடிப்புத் தளத்தில், சிலர் கொரோனா விதிமுறைகளை மதிக்காமல் நடந்துள்ளார்கள். இதனால் உஷ்ணமடைந்த டாம், அவர்களை வண்ட வண்டையாக திட்டித் தீர்த்துள்ளார்.
Ethan Hunt as Tom Cruise be lyke pic.twitter.com/Wg8bk3jah4
— TD (@DianOnno) December 16, 2020
இந்த சம்பவம் குறித்தான ஆடியோ தற்போது வெளியாகி உலகளவில் வைரலாகி வருகிறது. என்னதான் டாம், கொச்சை கொச்சையாக பேசியிருந்தாலும், படப்பிடிப்பில் இருக்கும் அனைவரின் நலத்திற்காகத்தான் அப்படி பேசியுள்ளார் என்று சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நெட்டிசன்களும் டாம் குரூஸுக்கு ஆதரவாகவே நிலைப்பாடு எடுத்துள்ளனர்.
இன்னும் சிலரோ, ‘அமெரிக்கர்களையும் இப்படி திட்டுங்கள். அப்போதாவது கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவார்களா எனப் பார்ப்போம்’ என்று தெரிவித்துள்ளனர். உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்காதான். அங்கு பலர் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் முகக்கவசம் கூட அணிவதில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.