தமிழ்நாடு

சுங்கக்கட்டணம் Fastag வசூல்.. ஒரே நாளில் ரூ.80 கோடியை கடந்தது

Published

on

ஃபாஸ்ட் டேக் வசூல் ஒரே நாளில் 80 கோடி ரூபாயைக் கடந்தது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் செலுத்துவதற்கு வாகனங்கள் வரிசையில் நிற்பதால் நேர விரயமும், எரிபொருள் செலவும் ஏற்படுகின்றன. இதை தவிர்க்கும் வகையில் ஃபாஸ்ட் டேக் முறை கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆன்லைனிலேயே பணம் செலுத்தி விட்டு, ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கரை வாகன முகப்பில் ஒட்டிக் கொள்ளலாம்.

இந்த ஃபாஸ்ட் டேக் முறை வரும் ஜனவரி 1 முதல் கட்டாயமாக்கப்படுகிறது. இதனால் ஒவ்வொருவரும் ஃபாஸ்ட் டேக் முறைக்கு மாறி வருகின்றனர். இதுவரையில் 2.20 கோடி ஃபாஸ்ட் டேக் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 50 லட்சம் ஃபாஸ்ட் டேக் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. நேற்று மட்டும் 80 கோடி ரூபாய் சுங்கக்கட்டணம் வசூல் ஆகியுள்ளது. சுங்கச்சாவடிகள், அதிகாரப்பூர்வ ஃபாஸ்ட் டேக் விற்பனை மையங்கள், அமேசான் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்களிலும் ஃபாஸ்ட் டேக்குகள் கிடைக்கின்றன.

Trending

Exit mobile version