தமிழ்நாடு

வாக்காளர்களுக்கு டோக்கன்? பரபரக்கும் இடைத்தேர்தல்!

Published

on

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் ஈரோடு பக்கம் திரும்பியுள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன் மீது பல புகார்களை கூறி வருகிறார் டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளர் சிவ பிரசாந்த்.

#image_title

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் திமுக உள்ளிட்ட பல கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்தது. ஆனால் அதிமுகவில் நிலவி வரும் குழப்பம் காரணமாக பிரதான எதிர்க்கட்சியின் தேர்தல் பிரச்சார செயல்பாடுகள் முடங்கியுள்ளது. அதே நேரத்தில் டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளர் சிவ பிராஷாந்த் தீவிரமாக தொகுதியில் சுற்றி சுற்றி வாக்கு சேகரித்து வருகிறார். அவர் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன் மீது பல விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

தனது பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த அமமுக வேட்பாளர் சிவ பிரஷாந்த், காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனால் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க முடியவில்லை. இதனால் மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாகனத்தில் ஏற்றி சென்று சில பாய்ண்டுகளில் நிறுத்தி அவர்களை சந்திக்கிறார். இதற்காக டோக்கன் வழங்கப்பட்டு பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது எனவும். இது தொடர்பான ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும், இந்த தேர்தல் நியாயமான தேர்தலாக இல்லை எனவும் அவர் கூறினார்.

இந்நிலையில் அதிமுகவின் குழப்பங்கள் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வர உள்ள நிலையில் தேர்தல் களம் இன்னும் சூடுபிடிக்க உள்ளது. தற்போது காங்கிரஸ் மற்றும் அமமுக வேட்பாளர்கள் களத்தில் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version