தமிழ்நாடு

ரூ.2000க்கு டோக்கன் தருவது எப்போது? தமிழக அரசு அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் புதிதாக திமுக அரசு நேற்று பதவி ஏற்றுள்ள நிலையில் ஐந்து முக்கிய திட்டங்களில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கையெழுத்திட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அவற்றில் ஒன்று கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொருளாதார ரீதியில் நலிவுற்று இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 முதல் தவணையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் ரூபாய் 2000 வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் அறிவிப்பு குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதி ரூபாய் 2000 வழங்கும் திட்டத்தை மே 10ஆம் தேதி முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 10ஆம் தேதி முதல் டோக்கன் தரப்பட்டும் என்றும், தினமும் 200 பேருக்கு ரூபாய் 2000 நிதி வழங்கப்படும் என்றும் வீடுவீடாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என்றும் டோக்கன் வாங்குவதற்காக ரேஷன் கடைகள் முன் பொதுமக்கள் வர வேண்டிய அவசியமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version