தமிழ்நாடு
இன்று தமிழக பட்ஜெட் தாக்கல்: என்னென்ன முக்கிய விஷயங்கள் இருக்கலாம்?
தமிழக பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது என்றும் இந்த ஆண்டும் கடந்த ஆண்டை போலவே காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்ய உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள திமுக அரசின் முதல் முழுமையான பட்ஜெட்டில் என்னென்ன விஷயங்கள் இருக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவை குறித்து தற்போது பார்ப்போம்:
பெண்களுக்கான மாதந்தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை திட்டம்
மாதந்தோறும் மின்கட்டணத்தொகை செலுத்தும் திட்டம்
மாணவர்களுக்கு மாதம் இருமுறை வெளியாகும் கல்வி பத்திரிகை திட்டம்
பழைய ஓய்வூதிய திட்டம் சார்ந்த அறிவிப்புகள்
மேற்கண்ட அறிவிப்புகள் இன்றைய பட்ஜெட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.