இந்தியா

வாரத்தின் முதல் நாளே 600 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

Published

on

பங்குச் சந்தை கடந்த சில நாட்களாகவே சரிந்து வரும் நிலையில் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியில் இருந்த நிலையில் இன்று மீண்டும் சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வாரம் பங்குச்சந்தை ஒரு சில நாட்கள் உயர்ந்ததை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் பங்கு சந்தை சென்றால் முதலீட்டாளர்கள் தங்கள் நஷ்டத்தை மீட்டு விடலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு பங்குச்சந்தை தொடங்கியவுடன் சரிவுடன் தொடங்கியது என்பதும் அது மட்டுமின்றி ஒரு மணி நேரத்தில் 600 புள்ளிகளுக்கும் அதிகமாக சென்செக்ஸ் சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 200 புள்ளிகள் வரை சரிந்து உள்ளதால் இன்றும் சரிவில் சென்ற பங்குச்சந்தையை பார்த்து முதலீட்டாளர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 58000 புள்ளிகளிலும், நிப்டி 17 ஆயிரத்து 300 புள்ளிகளிலும், தற்போது விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாலைக்குள் பங்குச்சந்தை மீண்டு வருமா? அல்லது தொடர் சரிவில் இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இருப்பினும் நீண்ட கால முதலீட்டு அடிப்படையில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது லாபமே என்றும் குறுகிய காலத்தில் பங்குச் சந்தையில் லாபம் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதலீடு செய்தால் நஷ்டம் ஏற்படும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version