தினபலன்

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்! (15/02/2020)

Published

on

15-Feb-20

சனிக்கிழமை

மேஷம்:

இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய  முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

ரிஷபம்:

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது.  அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

மிதுனம்:

இன்று குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலை தூக்கும். மிகவும் கவனமாக கையாண்டால் அது தீரும்.  கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். மெத்தனப் போக்கை கைவிடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

கடகம்:

இன்று உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். 

பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

சிம்மம்:

இன்று வியாபார நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். பெண்களுக்கு அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். 

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

 கன்னி:

இன்று பிரச்சினைகள் அற்ற நாள். விவேகத்துடன் நடந்து கொள்வீர்கள். சிலரது காரியங்கள் உங்களுக்கு வெறுப்பை உண்டாக்கலாம். எந்த விசயங்களையும் தீர விசாரித்து பேசுவது நன்மை அளிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

துலாம்:

இன்று காரிய வெற்றி உண்டாகும். மனமகிழ்ச்சி கூடும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை  வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

விருச்சிகம்:

இன்று வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்து செல்வது நல்லது. 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

 தனுசு:

இன்று வியாபார போட்டிகள் குறையும். எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மகரம்:

இன்று குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சிகள்  சாதகமான பலன் தரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. . தடைகள் விலகும். பணவரத்து திருப்தி தரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கும்பம்:

இன்று பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை  வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வாய்க்கு ருசியான உணவு உண்பீர்கள். கணவன் மனைவி ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை உண்டாகும். 

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மீனம்:

இன்று தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

 

seithichurul

Trending

Exit mobile version