தமிழ்நாடு

11 மாவட்டங்களில் இன்று சற்றுநேரத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது என்பதும் அதுமட்டுமின்றி வரும் 21ம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் மழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது

மேலும் தினந்தோறும் எந்தெந்த பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்ற விவரத்தையும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மேலும் நாளை கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், திண்டுக்கல், தென்காசி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் மிதமான மழை மழைக்கு வாய்ப்பு என்றும், ஜூலை 21, 22 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
அதேபோல் திண்டுக்கல், தென்காசி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்களில் நாளை மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

வங்கக்கடலில் ஜூன் 21ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என்பதால் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதால் ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

seithichurul

Trending

Exit mobile version