தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை இன்றும் கடும் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்

Published

on

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இதனால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் இருக்கும் நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 76 காசூகள் உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனை அடுத்து இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 104.43 என்றும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 76 காசுகள் உயர்ந்துள்ளதால் ரூபாய் 94.47 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் டீசல் கேஸ் மருந்து பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு காரணம் போர் தான் என்றும் தேர்தல் காரணமாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்று நிதியமைச்சர் சீதாராமன் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான போர்தான் பெட்ரோல் டீசலுக்கு காரணம் என்றும் நேரு ஆட்சியின் போது கொரியா போர் நடந்ததால் பொருட்களின் விலை உயர்வடைந்தது என்றும் இந்திராகாந்தி ஆட்சியிலும் கடுமையாக வரி உயர்த்தப்பட்டது என்றும் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version