தமிழ்நாடு

பெட்ரோலை அடுத்து ரூ.100ஐ நெருங்கியது டீசல்: இன்றும் விலை உயர்வு!

Published

on

கடந்த சில நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் , சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயில் ஏற்பட்ட விலை உயர்வின் காரணமாகவே இந்தியாவிலும் உயர்ந்து விலை உயர்ந்து வருவதாகவும் கூறப்பட்டது.

குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்ததால் பெட்ரோல் விலை 101 ரூபாயை தாண்டியது என்பதும் டீசல் விலை 96 ரூபாயை தாண்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதை அடுத்து பெட்ரோல் விலை 102 நெருங்கி வருகிறது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 5-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு பெரும் அமைதியை ஏற்படுத்தி உள்ளது. 3 நாட்களுக்கு ஒரு ரூபாய் என்ற ரீதியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்: சென்னையில் இன்று பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.27 என்ற விலையில் விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் டீசல் விலை 33 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.96.93 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதே ரீதியில் உயர்ந்து கொண்டே சென்றால் இன்னும் ஒரு சில நாட்களில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 110 ரூபாயும் டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 100 ரூபாயும் என உயர்ந்து விடும் என்று அஞ்சப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version