இந்தியா

கலால் வரியை குறைத்தன கேரள, புதுவை அரசுகள்: தமிழகத்தில் எப்போது குறையும்?

Published

on

மத்திய அரசு நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்தன என்பது குறித்த செய்தியைப் பார்த்தோம். பெட்ரோல் மீதான கலால் வரியை 5 ரூபாயும் டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாயும் குறைக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது.
இதன் காரணமாக சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூபாய் 5 ரூபாய் குறைந்துள்ளது என்பதும், டீசல் விலை ரூ.11 குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் மத்திய அரசை தொடர்ந்து ஒரு சில மாநில அரசுகளும் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக கேரளாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டதால் அம்மாநிலத்தில் இன்று பெட்ரோல் விலை ரூ.6.57ம், டீசல் விலை ரூ.12.33ம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி 7 ரூபாய் குறைப்பு என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவிபத்துள்ளார். இதனால் புதுவையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 94.94-க்கும், டீசல் விலை 83.58-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக அரசும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்து தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பொதுமக்களின் இந்த கோரிக்கையை தமிழக அரசு செவிசாய்க்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version