தமிழ்நாடு

இரண்டாவது நாளாக குறைந்த பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் எவ்வளவு?

Published

on

தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் காரணமாக மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உயர்த்தாமல் இருந்ததாக செய்திகள் வெளியானது. தேர்தல் முடிந்தவுடன் மொத்தமாக உயரும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்றும் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சென்னை உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 18 காசுகள் குறைந்து லிட்டர் ஒன்றுக்கு 92.77 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது.

அதே போல் டீசல் விலை சென்னையில் இன்று 86 காசுகள் குறைந்து 86.10 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. நேற்றைய விலையை விட இன்று டீசல் விலையை லிட்டருக்கு 19 காட்சிகள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஓரளவு குறைந்து இருந்தாலும் இந்த விலை குறைப்பு மிகவும் குறைவு என்றும் சர்வதேச சந்தையின் விலையை கணக்கிட்டு பார்த்தால் 30 ரூபாய்க்கு மேல் இன்னும் குறைந்திருக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று மற்றும் நேற்று முன்தினம் ஆகிய இரண்டு நாட்களிலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. ஆனால் அதற்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவில் குறைக்கப்படவில்லை என்பதுதான் உண்மையாக உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version