தமிழ்நாடு

மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ரூ.102ஐ கடந்தது பெட்ரோல் விலை!

Published

on

கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் அதே நிலையில் இருந்த நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதால் பெட்ரோல் விலை 102 ரூபாயை தாண்டி உள்ளது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது என்பதும் தமிழக அரசு குறைத்த ரூபாய் மூன்று வரியையும் தாண்டி தற்போது 100 ரூபாயை தாண்டி பெட்ரோல் விற்பனையாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து உள்ளது. இதனை அடுத்து சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.10 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டீசல் விலை சென்னையில் 34 காசுகள் உயர்ந்து உள்ளது. இதனை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை 97.93 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 10 முதல் 20 காசுகள் மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வந்த நிலையில் தற்போது 30க்கும் அதிகமாக உயர்ந்து வருவதால் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒரு ரூபாய் உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version