தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை இன்றும் கணிசமாக உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி!

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது என்பதும் மூன்று நாட்களுக்கு ஒரு ரூபாய் என்ற ரீதியில் உயர்ந்து வருவதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணைத் தொட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வை அடுத்து இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதனையடுத்து சென்னையில் இன்று பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரித்து உள்ளது என்பதும் அதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 101.53 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் டீசல் விலை இன்று 33 காசுகள் அதிகரித்துள்ளதை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.97.26 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே ரீதியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மூன்று நாட்களுக்கு ஒரு ரூபாய் என்று உயர்ந்து கொண்டே சென்றால் பெட்ரோல் விலை விரைவில் ரூபாய் 110ம், டீசல் விலை விரைவில் ரூபாய் 100ம் என அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.

தமிழக அரசு பட்ஜெட்டில் ரூபாய் மூன்று பெட்ரோலுக்கான வரி குறித்தும் பிரயோஜனம் இல்லாமல் தற்போது மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்திக் கொண்டே செல்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version