தமிழ்நாடு

ரூ.95ஐ தாண்டியது டீசல் விலை: ரூ.100ஐ நெருங்கியது பெட்ரோல் விலை!

Published

on

கடந்த சில நாட்களாக மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருவதை அடுத்து மீண்டும் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கிவிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்து உள்ளதை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.99.80 என்பது என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. அதேபோல் சென்னையில் டீசல் விலை 28 காசுகள் உயர்ந்ததை அடுத்து டீசல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 95.05 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் விலை ரூ.100ஐ நெருங்கி விட்டது என்பதும் டீசல் விலை ரூ.95ஐ தாண்டி விட்டது என்பதும் பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பெரிய அளவில் உயராத நிலையில் தினமும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நேற்று விழுப்புரத்தில் கூட்டமொன்றில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் பெட்ரோல் விலையை ரூ.35 குறைக்க பாஜக தயாராக உள்ளது என்றும் விரைவில் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் விலை கொண்டுவரப்படும் என்றும் அப்போது பெட்ரோல் விலை 35 ரூபாய் குறைப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். அண்ணாமலை கூறியது நடைமுறைக்கு எப்போது வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version