தமிழ்நாடு

நீண்ட நாட்களுக்கு பின் பெட்ரோல் விலை உயர்வு: மீண்டும் ரூ.100ஐ நெருங்கியது!

Published

on

சென்னையில் கடந்த சில வாரங்களாக பெட்ரோல் விலை உயராமல் இருந்த நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் விலை உயர்ந்ததால் 100 ரூபாயை நெருங்கி விட்டதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப சென்னை உள்பட இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதும் டீசல் விலை மட்டும் அவ்வப்போது விலை உயர்ந்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் பெட்ரோல் வரி ரூபாய் மூன்று குறைக்கப்பட்டதை அடுத்து 100 ரூபாய்க்கும் குறைவாக பெட்ரோல் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் விற்பனை ஆகிக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை உயராமல் இருந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் டீசல் விலை மட்டும் அவ்வப்போது விலை உயர்ந்து பொது மக்களின் அதிருப்திக்கு உள்ளாக்கியது.

இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டுமே விலை உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இன்று பெட்ரோல் விலை 19 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 99.15 என விற்பனையாகி வருகிறது. அதே போல் டீசல் விலை 24 காசுகள் உயர்ந்து உள்ளது எடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.17 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தங்களது கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version