தமிழ்நாடு

இன்றும் விலை உயர்ந்த பெட்ரோல் விலை: ரூ.102ஐ நெருங்குகிறது!

Published

on

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வருவதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவிலும் தினமும் உயர்ந்துகொண்டே வருகிறது என்பதும், தினமும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்ததை அடுத்து இன்றும் 31 காசுகள் உயர்ந்துள்ளதால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ102ஐ நெருங்குகிறது என்பது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் டீசல் விலையும் இன்று 9 காசுகள் உயர்ந்து 95 ரூபாயை நெருங்கி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பின்படி சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 31 காசுகள் உயர்ந்ததால் ரூ.101.37 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. அதேபோல் சென்னையில் டீசல் விலை 9 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து ரூ.94.15 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒருபக்கம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டு வருவதால் உயர்கிறது என்பதும், இன்னொரு பக்கம் மத்திய மாநில அரசுகள் சுமார் ஐம்பது ரூபாய் வரி விதிப்பதால் உயர்ந்து கொண்டு வருகிறது என்பதும் இந்த உயர்வு பொதுமக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த தேர்தலில் இதன் தாக்கம் தெரியும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version