தமிழ்நாடு

மீண்டும் உயர்ந்த பெட்ரோல் விலை: சென்னையில் ரூ.101ஐ தாண்டியதால் பரபரப்பு!

Published

on

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதை பார்த்து வருகிறோம். சமீபத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தினமும் உயர்ந்து வருவதை அடுத்தே பெட்ரோல் டீசல் விலை உயர்வதாக மத்திய மாநில அரசுகள் விளக்கம் அளித்தாலும் மத்திய மாநில அரசுகள் இணைந்து கிட்டத்தட்ட ஐம்பது ரூபாய்க்கு மேல் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வரி விதிப்பதால் தான் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும் மேல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் எவ்வளவோ கேட்டுக்கொண்டும் மத்திய மாநில அரசுகள் வரியை குறைப்பதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்ததை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் 101.06 என்ற விலையில் இன்று விற்பனையாகிறது.

அதேபோல் சென்னையில் டீசல் விலை 15 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து ரூ.94.06 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதே ரீதியில் சென்றால் டீசல் விலையும் ரூ.100ஐ வெகுவிரைவில் தொட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் டீசலுக்கான வரியை மாநில அரசு மற்றும் மத்திய அரசு குறைத்தால் மட்டுமே பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும் இல்லையென்றால் பெட்ரோல் விலை 110 ரூபாய்க்கு மேலும், டீசல் விலை ரூ.100க்கு மேலும் செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version