தமிழ்நாடு

சென்னையில் ரூ.101ஐ நெருங்கும் பெட்ரோல் விலை: இதற்கு முடிவே இல்லையா?

Published

on

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 100க்கு மேல் அதிகமாக விற்பனை செய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது பெட்ரோல் விலை ரூ.101ஐ நெருங்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில மாதங்களாக கிட்டத்தட்ட தினமும் உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எண்ணெய் நிறுவனங்களிடம் கொடுத்த பின்னர் மிக அதிகமாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையான கண்டனம் தெரிவித்த போதிலும் மத்திய மாநில அரசுகள் இதனை கட்டுப்படுத்த வில்லை என்பதும் குறிப்பாக பெட்ரோல் டீசலுக்கு விதிக்கப்பட்ட வரிகளை குறைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ தாண்டிய நிலையில் தற்போது 101 ரூபாயை நெருங்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை இன்று 31 காசுகள் உயர்ந்ததை அடுத்து லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 100.75 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. அதே போல் டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை என்பதால் நேற்றைய விலையான ரூபாய் 93.91 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் டீசல் விலை தினமும் உயர்ந்து கொண்டுள்ளதை ஊடகங்களும் பொது மக்களும் அரசியல்வாதிகளும் கண்டித்து கொண்டிருந்தாலும் மத்திய மாநில அரசுகள் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதால் இதற்கு ஒரு முடிவே இல்லையா? என்ற ஏக்கம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version