இந்தியா

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிப்பா? அதிர்ச்சி தகவல்

Published

on

கடந்த சில வாரங்களாகவே கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்து வரும் நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்புக்குப் பின்னர் உச்சத்திற்கு சென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

கச்சா எண்ணெய் பீப்பாய் 112 டாலர் என வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதால் உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உச்சத்திற்கு சென்று உள்ளது. ஆனால் இந்தியாவில் ஐந்து மாநில தேர்தல் நடைபெறும் காரணத்தினால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த மூன்று மாதங்களாக உயரவில்லை.

ஆனால் மார்ச் 7ம் தேதியுடன் தேர்தல் முடிவடைய உள்ளதால் மார்ச் 8ஆம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை வெகுவாக உயரும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் மார்ச் 8ஆம் தேதி முதல் லிட்டருக்கு 10 ரூபாய் வரை உயரும் என்று பொதுமக்கள் கணித்து இருந்த நிலையில் பொருளாதார நிபுணர்கள் ஒரு லிட்டருக்கு 25 ரூபாய் வரை விலை உயர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.

அதேபோல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஏற்கனவே அதிகரித்துள்ள நிலையில் கேஸ் சிலிண்டர் விலையும் இன்னும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது .

இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை தற்போது அதிகரித்து வந்தாலும் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலை கணிசமாக குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது .

 

 

seithichurul

Trending

Exit mobile version