தமிழ்நாடு

பெட்ரோல் ரூ.5 குறைவு, டீசல் ரூ.11 குறைவு: கலால் வரிக்குறைப்பால் மக்கள் மகிழ்ச்சி

Published

on

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக கடந்த சில நாட்களாக இருந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருவதைப் பார்த்தோம்.

குறிப்பாக தினமும் 30 காசுகளுக்கும் மேல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்ததால் மூன்று நாட்களுக்கு ஒரு ரூபாய் என்ற விகிதத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது என்பதும் இதனால் பெட்ரோல் விலை சென்னையில் 106 ரூபாய்க்கும் அதிகமாக டீசல் விலை சென்னையில் 102 ரூபாய்க்கும் அதிகம் விற்பனையாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வந்ததால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடவுள் சிக்கலில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று தீபாவளி பரிசாக மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக நேற்று அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரியை 10 ரூபாயும் டீசல் மீதான கலால் வரியை 5 ரூபாயும் குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பின் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சற்று முன் வெளியான தகவலின்படி பெட்ரோல் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் 26 காசுகள் குறைந்துள்ளதால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40 என விற்பனையாகிறது.

அதேபோல் டீசல் விலை 11 ரூபாய் 16 காசுகள் குறைந்து உள்ளதை அடுத்து ரூ.91.43 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version